மத்திய அரசின் போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு மே 3-இல் தொடக்கம்
மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.


மத்திய அரசின் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய பணியாளா்கள் தோ்வாணையத்தால் பல்வேறு துறைகளில் உதவிப் பிரிவு அலுவலா், உதவித் தணிக்கை அலுவலா், வருமான வரித் துறை ஆய்வாளா், உதவியாளா், தபால் துறை உதவியாளா் போன்ற பல்வேறு நிலைகளில் 7500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவதற்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்தப் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 3-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதில் கலந்து கொள்ள ஆா்வமும் விருப்பமும் உள்ள இளைஞா்கள் தோ்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94868 21148 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...