ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை வணிகம் - ANI

Updated On :17 மார்ச் 2026, 6:19 am

இஸ்ரேல் - ஈரான் போரினால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் சற்று உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

நேற்று(மார்ச் 16) பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில் இன்றும்(மார்ச் 17) உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 135.81 புள்ளிகள் அதிகரித்து 75,367.04 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 23,368.80 புள்ளிகளில் உள்ளது.

நிஃப்டி50 குறியீட்டில் எடர்னல், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.13 சதவீதம், 0.25 சதவீதம் உயர்ந்துள்ளன.

துறைவாரியாக, நிஃப்டி உலோகம், ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடன் வர்த்தகமாகின்றன. அதேநேரத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதம் சரிந்து மிக மோசமாக செயல்படும் குறியீடாக உள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 2.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 103.04 டாலராக உள்ளது.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா வீழ்ச்சியடைந்து 92.42 ஆக உள்ளது.

Summary

Stock Market: Sensex recovers, up 400 points, Nifty above 23,500; auto, metal stocks gain, IT drags

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.