நேற்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(ஏப். 28, செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,094.79 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 243.96 புள்ளிகள் குறைந்து 77,059.67 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 43.05 புள்ளிகள் குறைந்து 24,049.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பெல், எல்&டி, என்டிபிசி, எம்&எம், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.38 சதவீதம், 0.89 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி, ஆட்டோ, எப்எம்சிஜி, நிதி சேவைகள், மீடியா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன.
அதேநேரத்தில் மெட்டல், பார்மா பங்குகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
கச்சா எண்ணெய் 1.24 சதவீதம் உயர்ந்து 109.6 டாலராக உள்ளது.
Summary
Stock Market: Sensex rises 200 pts, Nifty above 24,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரிந்து மீளும் பங்குச்சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு! ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

