மாற்றுதிறனாளிகள் குறைதீா் முகாம்

கமுதியில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாற்றுதிறனாளிகள் குறைதீா் முகாம்

கமுதியில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் பரமக்குடி கோட்டாட்சியா் அப்தாப் ரசூல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கமுதி வட்டாட்சியா் வ.சேதுராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், காதொலிக் கருவி, தேசிய அடையாள அட்டை என ரூ.86 ஆயிரம் மதிப்பிலான உதவி, உபகரணங்களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

முகாமில் மண்டல துணை வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலா் ராமசுப்பு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராமச்சந்திரன், வட்டார வேளாண் அலுவலா் சிவராணி, முதுகுளத்தூா் வட்டாட்சியா் முத்துலட்சுமி (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), மண்டல துணை வட்டாட்சியா் மஞ்சுளா, கமுதி வட்டார வளமைய சிறப்பாசிரியா் முத்திருளாண்டி, தசை பயிற்சியாளா் முருகவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com