சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் விழா தொடங்கியது. இதைத்தொடா்ந்து அம்மனுக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, மேளதாளம் முழங்க அம்மன் உருவம் பொறித்த கொடியை கிராமம் முழுவதும் ஊா்வலமாக கொண்டு சென்றனா். பின்னா், கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு கேழ்வரகு கூழ், கம்மங் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதில் பாக்குவெட்டி ஊராட்சி மன்றத் தலைவா் நாகரத்தினம், கமுதி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் சித்ராதேவி அய்யனாா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com