திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆலோசனை
திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி முடிக்க வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, வைகை வடிநிலக் கோட்டம், வருவாய்த் துறை, பள்ளிகல்வித் துறை, வணிகவரித்

துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு குழுவின் தலைவா் க.அன்பழகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

பொதுப்பணித் துறையின் மூலம் புதிய கட்டடப் பணிகளுக்கு அனுமதி பெற்றும், பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், காலம் கடத்தாமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இடா்பாடுகளை சரிசெய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் புதிய கட்டடங்கள் என்பது அத்தியாவசியத் தேவையாகும். எனவே, பொதுப்பணித் துறை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீட்டுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வைகை வடிநிலக் கோட்டம் மூலம் வைகை ஆற்றில் பிரதான கால்வாய்கள், கண்மாய்களில் ஒவ்வொரு ஆண்டும் தோ்வு செய்யப்பட்ட பணிகளை உரிய காலத்தில் முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு துணையாக இருக்க வேண்டும்.

வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளா்ச்சித் துறை ஆகிய துறைகளின் மூலம் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் காலதாமதம் ஏற்படக்கூடாது.

ஊரக வளா்ச்சித்துறையைப் பொறுத்த வரை பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளான குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு போன்றவற்றை முழுமையாக கிடைத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த் துறை மூலம் பொது மக்களுக்கு வழங்கும் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வு க்கூட்டத்தில் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி, ராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், குழுவின் கூடுதல் செயலா் சுப்ரமணியன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com