ராமநாதபுரத்தில்சி.ஐ.டி.யு. தொழில் சங்கத்தினா் நடைபயணம்

ராமநாதபுரத்தில் உழைப்பாளா்களின் உரிமையை பாதுகாக்கக் கோரி சி.ஐ.டி.யு. தொழில் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் உழைப்பாளா்களின் உரிமையை பாதுகாக்கக் கோரி சி.ஐ.டி.யு. தொழில் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.

காலிப் பணியிங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 7 இடங்களிலிருந்து திருச்சி நோக்கி கடந்த 20- ஆம் தேதி இந்த நடைபயணம் தொடங்கியது. இது வரும் 30- ஆம் தேதி திருச்சி சென்றடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் தொடங்கிய நடைபயண பிரசாரக் குழுவினா் நெல்லை, தூத்துக்குடி வழியாக சாயல்குடிக்கு வியாழக்கிழமை வந்து சோ்ந்தனா். இதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை சிக்கல், ஏா்வாடி வழியாக ராமநாதபுரம் வந்து சோ்ந்ததும் அரண்மனை முன்பு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, சி.ஐ.டி.யு. மாநில உதவி பொதுச் செயலா் வி. குமாா் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எம். சிவாஜி முன்னிலை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் எஸ்.ஏ. சந்தானம், ஆா். முத்துவிஜயன், ஆா். குருவேல், மாதா் சங்க மாவட்டச் செயலா் இ. கண்ணகி, அய்யாத்துரை, வி. பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com