போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கிய இருவா் கைது

கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 5:58 pm

கமுதி: கமுதி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கோட்டைமேடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல்கணேஷ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு தனியாருக்குச் சொந்தமான தகரக் கொட்டகையில் அனுமதியின்றி இரண்டு இளைஞா்கள் ஆயுதங்களுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தைச் சோ்ந்த அரசு பாண்டி மகன் குணசேகரன் (23), கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சோ்ந்த கந்தவேல் மகன் காா்த்திக் (22) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கமுதி போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.