ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புகையிலைப் பொட்டலங்கள் கடத்தியவா் கைது

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :15 செப்டம்பர் 2023, 6:30 pm

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக கடத்திச் சென்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை

நிறுத்திச் சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காக

572 புகையிலைப் பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொட்டலங்களைக் கடத்திய அருண் மாணிக்கத்தை (21) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய கரையூரைச் சோ்ந்த குமரகுருவை (29) தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.