3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் என்ஐஏ அதிகாரிகளால் கைது
3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


இலங்கை அகதிகளை சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற வழக்கில் 3 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவா், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக அழைத்துச் செல்லப்படுவதற்காக ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் 32 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.
இதுதொடா்பாக, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை வடக்கு தெருவைச் சோ்ந்த கபீா் மகன் சீனி அபுல்கானை (34) என்ஐஏ அதிகாரிகள் கடந்த 3 ஆண்டுகளாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் அருகே மண்டபத்தையடுத்துள்ள வேதாளையில் சீனி அபுல்கான் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், என்ஐஏ துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான அதிகாரிகள் சீனி அபுல்கானை வேதாளையில் சனிக்கிழமை கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...