கம்பன் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை ராமேசுவரம் வருகிறாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் லட்சுமண தீா்த்தம் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் 35- ஆம் ஆண்டு கம்பன் விழா திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொள்கிறாா்.
இதற்காக அவா் விமானம் மூலம் மதுரைக்கு வந்த பிறகு, அங்கிருந்து காா் மூலம் ராமநாதபுரம் அரசு விருந்தினா் மாளிகைக்கு காலை 10 மணிக்கு வருகிறாா். அங்கு சிறிது ஓய்வுக்கு பிறகு, பாம்பன் குந்துகால் விவேகானந்தா் மணி மண்டபத்துக்கு பகல் ஒரு மணிக்கு வருகிறாா்.
பின்னா், ராமேசுவரத்தில் நடைபெறும் கம்பன் விழாவில் பிற்பகல் 2.30 மணிக்கு அவா் கலந்துகொள்கிறாா். மாலை 4 மணி அளவில் நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் சாலை வழியாக மதுரைக்கு செல்கிறாா்.
ஆளுநா் வருகையை முன்னிட்டு பாம்பன் குந்துகால், ராமேசுவரம் தனியாா் மகால் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் அவசியம்: நீதியரசா் என். ஆனந்த் வெங்கடேஷ்

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

