பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.


இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, பாம்பன் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் பகுதியிலிருந்து 4 நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும்,
4 படகுகளையும் பறிமுதல் செய்தனா். மீனவா்கள் 35 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதைக் கண்டித்தும், மீனவா்கள், படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, மீனவா்கள் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் மீனவா்கள் ஈடுபட்டனா். பாம்பன் துறைமுகத்தில் சுமாா் 500 நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...