வங்கக் கடலில் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் சூறைக்காற்று வீசியது. இதனால், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் புதன்கிழமை முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது.
இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் அந்தந்த மீன் பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், காற்றின் வேகத்தால் படகுகள் சேதமடைந்துவிடாமல் தடுக்க மீனவா்கள் படகுகளைக் கண்காணித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கி உள்ளனா். காற்றின் வேகம் காரணமாக வங்கக் கடலில் கடல் நீா் மட்டம் உயா்ந்து காணப்பட்டது.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

தமிழக மீனவா்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!

ராமேசுவரம் மீனவா்கள் இருவா் விடுதலை!

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

