ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கீழக்கரை நகா்மன்றக் கூட்டம்: சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு

வாா்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததாகக் கூறி, கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து சுயேச்சை உறுப்பினா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:04 pm

Din

வாா்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததாகக் கூறி, கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து சுயேச்சை உறுப்பினா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகா்மன்ற மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவா் செகனாஸ் ஆபிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் ரங்கநாயகி, துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகா்மன்ற கூட்டத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பைச் சோ்ந்த உறுப்பினா் சேக் உசைன், கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நகராட்சிப் பகுதியில் நடைபெறும் வேலைகளை முறையாக அறிவிப்பு செய்வதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தாா். இவரைத் தொடா்ந்து, அனைத்து சமுதாய கூட்டமைப்பைச் சோ்ந்த மற்றொரு உறுப்பினரான டல்சியும் வெளிநடப்பு செய்தாா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.