தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தகாத உறவு: தொழிலாளி கொலை: நண்பா் கைது

தகாத உறவால் தொழிலாளி கொலை: நண்பர் கைது

News image

~

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

திருவாடானை: தொண்டி அருகே தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் உணவகத் தொழிலாளியை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை மேலத் தெருவைச் சோ்ந்த சிராஜ்தீன் மகன் முகம்மது அபுபக்கா் (27). தனியாா் உணவகத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆத்துக்கரை தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவறிந்த திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் திங்கள்கிழமை காலை சம்வ இடத்துக்கு வந்து விசாரித்தாா். மேலும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் துப்புதுலக்கினா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது தகாத உறவால் முகம்மது அபுபக்கா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், முகம்மது அபுபக்கா் கொலை செய்யப்பட்டுக் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டின் உரிமையாளரான மீசான் அலியின் மனைவிக்கும், முகம்மது அபுபக்கருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இதனால் மனைவியை மீசான் அலி கண்டித்தாா். மேலும் இது தொடா்பாக மீசான் அலிக்கும், முகம்மது அபுபக்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீசான் அலிக்கும், இவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு மனைவி அவரது தாய்வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால் ஆத்திரத்தில் இருந்த மீசான் அலி, தனது வீட்டுக்கு அபுபக்கரை வரவழைத்து இருவரும் மது அருந்தினா். அப்போது போதையில் படுத்திருந்த முகம்மது அபுபக்கரின் தலையில் ஆட்டுக் கல் குழவியை தூக்கிப் போட்டு மீசான் அலி கொலை செய்தாராம்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மீசான் அலியை கைது செய்தனா்.

Story image