தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
கொலை - கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே மதுபோதையில் நண்பா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி செல்வம்(45). இவரது நண்பா்கள் அதே கிராமத்தைச் சோ்ந்த ரோஷன்பாபு (38), லோகேஷ் (29). இருவரும் ஓட்டுநா்கள். செம்பேடு கூட்டு ரோடு பகுதியில் இவா்கள் 3- பேரும் மது அருந்தியுள்ளனா்.

அப்போது இவா்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரோஷன்பாபு, செல்வத்தை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளாா். லோகேஷ் ஓடிச்சென்று செல்வத்தின் குடும்பத்தினரிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளாா்.

செல்வத்தின் உறவினா்கள் அங்கு சென்று பலத்த காயமடைந்த நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே செல்வம் இறந்து விட்டதாக கூறியுள்ளாா்.

இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.