பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறித்து...

IndiGo

இண்டிகோ விமானம் - கோப்புப் படம்

Published On :

இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டர்ஸ் எல்பர்ஸ் தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜிநாமா செய்தார்.

கடந்த சில மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறு, விமான சேவை ரத்து உள்ளிட்ட மிகப்பெரிய செயல்பட்டு இடையூறுகளை இண்டிகோ நிறுவனம் சந்தித்ததைத் தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இவரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து இண்டிகோவின் மேலாண்மை இயக்குநராக உள்ள ராகுல் பாட்டியா இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தொடர் விசாரணைகளுக்குப் பின் பீட்டர் எல்பர்ஸ் ராஜிநாமா செய்துள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் பெயரில் இன்டர்குளோப் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. ராஜிநாமா தொடர்பாக இன்டர்குளோப் நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா கூறியதாவது:

''நிறுவனத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவும், செயல்பாட்டு சிறப்பை மீட்டுருவாக்கம் செய்து சிறப்பான பராமரிப்பு சேவையை வழங்குவதற்கும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ராகுல் பாட்டியா பொறுப்பேற்றுள்ளார்.

பயணிகளிடையே நம்பகத்தன்மை ஏற்படுத்த தொழில்முறையை நேர்த்தியில் உறுதியுடன் செயல்படும் வகையில் இவரின் பணிக்காலம் இருக்கும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

IndiGo CEO Pieter Elbers resigns

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.