
14 மணி நேர பயணம் வீண்! மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய இண்டிகோ விமானம்
வான் வெளி கட்டுப்பாடுகளால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய இண்டிகோ விமானம்

புது தில்லியிலிருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு இன்று (மார்ச் 9) புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் - ANI
புது தில்லி : புது தில்லியிலிருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு இன்று (மார்ச் 9) புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று மீண்டும் தில்லிக்கே திருப்பி விடப்பட்டது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளால், மேற்காசிய பிராந்தியத்தில் வான் வெளியைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்நிலையில், தில்லியிலிருந்து பிரிட்டனின் மான்செஸ்டருக்கு இன்று (மார்ச் 9) புறப்பட்ட போயிங் 787 ரக இண்டிகோ விமானம் (6இ 033) மேற்காசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்ட திடீர் வான் வெளி கட்டுப்பாடுகளால் ஆப்பிரிக்காவின் எரிட்ரியா வான் வெளி வரை சென்ற பின், அந்த விமானம் மீண்டும் தில்லிக்கே திருப்பி விடப்பட்டது.
இன்று அதிகாலை 12.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் வளைகுடா வான் வெளி வழியைப் பயன்படுத்தாமல் எத்தியோபியா வழியாக ஆப்பிரிக்கா வான் வெளியைப் பயன்படுத்தி எரிட்ரியா வரை சென்றது. இந்நிலையில், சுமார் 8 மணி நேரம் பயணித்த அந்த விமானம் எரிட்ரியாவைத் தாண்டிச் செல்ல திடீரென விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டு திருப்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாக இண்டிகோ தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, அந்த விமானம் தில்லியில் இன்று பகல் 2.30 மணிக்கு தரையிறங்கியது.
Summary
IndiGo's Manchester flight returns to Delhi due to airspace curbs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







