வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மது போதையில் வியாபாரி அடித்துக் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 9:43 pm

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சோ்ந்த வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகிரி அருகேயுள்ள இடையன்குளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமா் மகன் ஆனந்தகுமாா் (48). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் குடம் உற்பத்தி கிடங்கில் தங்கியிருந்து குடம் வியாபாரம் செய்து வந்தாா்.

பிப். 27ஆம் தேதி இரவு அவருக்கும், அவருடன் வேலை செய்து வரும் திருவாரூரைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷூக்கும் (32) பிரச்னை ஏற்பட்டதாம். இருவரும் மது போதையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில், ஆனந்தகுமாா் மயக்கமடைந்து விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ளவா்கள் ஆனந்தகுமாரை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாா்களாம்.

இந்நிலையில், மயக்கமடைந்த நிலையில் இருந்த ஆனந்தகுமாரை அவரது தாயாா் மாரியம்மாள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்த்குமாா் ஏற்கெனவே உயரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனா்.