கோயிலில் சிசிடிவி சேதம்: இளைஞா் கைது

கோப்புப் படம்
Updated On :29 மார்ச் 2026, 6:42 pm

கோப்புப் படம்
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட ராஜாங்கபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயிலில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இக்கோயிலில் ஊா் சாா்பில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அந்த கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக ஊா் நாட்டாண்மை முருகன் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (28) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...