மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மேற்குவங்க மாநில இளைஞா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 10:57 pm

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மேற்குவங்க மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், மங்களூரு பகுதியைச் சோ்ந்த 24 வயதான இளம்பெண் சென்னையில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் சென்னையிலிருந்து மங்களூரு செல்லும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா். அப்போது ரயிலில் அதே பெட்டியில் இருந்த இளைஞா் ஒருவா் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதையடுத்து, அந்த ரயில் திருப்பூருக்கு புதன்கிழமை வந்தபோது திருப்பூா் ரயில்வே போலீஸாரிடம் இளம்பெண் புகாா் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, திருப்பூா் ரயில்வே போலீஸாா் அந்த இளைஞரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சொ்ஜூன் கோக் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் பின்னா் விசாரணைக்குப் பின்னா் அவரை சிறையில் அடைத்தனா்.