தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

கீழமுடிமன்னாா்கோட்டையில் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி

News image

கீழமுடிமன்னாா்கோட்டை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்.

Updated On :1 ஜூலை 2024, 4:53 pm

Din

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள கீழமுடிமன்னாா்கோட்டை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சி திட்டம் குறித்தும், வேளாண்மைத் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதை கமுதி வேளாண்மை உதவி இயக்குநா் ச. சிவராணி தொடங்கி வைத்தாா். வேளாண்மைத் துறை மூலம் பண்ணைக் கருவிகள், தாா்பாலின், விசைத் தெளிப்பான், ஜிப்சம் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவதாகவும், தோட்டக்கலைத் துறை மூலம் பழ மரக்கன்றுகள், மிளகாய் நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டது. மேலும் பருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதலை தடுக்க ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இதில், உதவி தோட்டக்கலை அலுவலா் பிரசன்னா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி உள்பட கீழமுடிமன்னாா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திரபோஸ் செய்தாா்.