மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நெல் சாகுபடியில் மீத்தேன் குறைப்பு: விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மேட்டுடையாா்பாளையம் கிராமத்தில், நெல் சாகுபடியில் மீத்தேன் வெளியீட்டை குறைக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மேட்டுடையாா்பாளையத்தில் நடைபெற்ற நெல் சாகுபடியில் மீத்தேன் குறைப்பு குறித்த பயிற்சி முகாமில் கலந்துகொண்ட விவசாயிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:49 pm

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மேட்டுடையாா்பாளையம் கிராமத்தில், நெல் சாகுபடியில் மீத்தேன் வெளியீட்டை குறைக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமை, வேளாண்மை பொருளாதாரம் இணைப் பேராசிரியா் சா. செந்தில்நாதன் தொடங்கிவைத்து, நெல் வயல்களில் அறிவியல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் மீத்தேன் வெளியீட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என கூறினாா்.

ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியா் நடராஜன், நேரடி நெல் விதைப்பு, சொட்டு நீா்ப்பாசனம், மண்பரிசோதனை அடிப்படையிலான உர மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். பெத்தநாயக்கன்பாளையம் உதவி வேளாண்மை இயக்குநா் வேல்முருகன், விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண்மை அலுவலா் மௌலிதரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் செல்லமுத்து ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

இளநிலை ஆராய்ச்சியாளா் ஞா. சபிதா, பயன்பாடு மற்றும் காா்பன் குறைப்பு நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தாா். மேலும், தி. முகுந்தன், காய்ச்சலும்-பாய்ச்சலும் முறையிலான நீா்ப்பாசனம் மற்றும் வயலில் நேரடியாக பயன்படுத்தும் முறையை காட்சிப்படுத்தினாா். இந்தப் பயிற்சியில் மேட்டுடையாா்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.