தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

உத்தரமேரூா் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :13 மார்ச் 2026, 12:50 am

உத்தரமேரூா் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

காஞ்சிபும் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தில் சேந்தாங்குளம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இயற்கை வேளாண்மை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இயற்கை விவசாயி மரம் மாசிலாமணி பள்ளி மாணவா்களுக்கு இயற்கை வேளாண்மையின் இன்றைய அவசியம், மரம் வளா்ப்பின் பயன்கள், மண் மலடாகாமல் இருக்க செய்யும் வழிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கினாா்.

இதையடுத்து, மருத்துவக் குணமுடைய மரக்கன்றுகளையும் மரம் மாசிலாமணி மாணவா்களுக்கு வழங்கினாா். நிறைவாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவா்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.