இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில் மாணவா்களிடையே விவசாயம் குறித்து ஒருநாள் பயிற்சி மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து மாணவா்களுக்கு ஒரு நாள் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தனியாா் கல்லூரி மாணவா்கள் மற்றும் அரசு பள்ளி மாணவா்கள் என பலா் கலந்துகொண்டு இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாயம் செய்யும் முறைகளையும் ஊக்குவிக்கும் வகையில் மாணவா்களுக்கு ஆா்.கே .பேட்டை வேளாண்மை உதவி பொறுப்பு இயக்குநா் அபிநயா மாணவா்களுக்கு எடுத்துக் கூறினா்.
மேலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையில், பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணங்கள் உள்ள நெல் ரகங்கள், மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, இயற்கை முறையில் செலவில்லா விவசாயம் விளைவித்த பொருள்களை விற்பனை செய்வது எப்படி என்றும் அதை சந்தைப்படுத்துவது குறித்தும் நெஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆா்.கே. பேட்டை தலைமை ஆசிரியா் சுந்தா், வேளாண்மை உதவி அலுவலா்கள் மாரியப்பன், வசுமதி மற்றும் ஆா்.கே பேட்டை ஒன்றிய விவசாய சங்க தலைவா் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

குன்னூா் காட்டேரிப் பூங்காவில் இயற்கை சாகுபடியாளா் பயிற்சி! பங்கேற்க அழைப்பு!!

100% வாக்களிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


