இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!

லெபனானில் பலி எண்னிக்கை 250-ஐ கடந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன...

News image

லெபனானில் பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் - AP

Updated On :8 ஏப்ரல் 2026, 3:25 pm

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதிகளில் புதன்கிழமை(ஏப். 8) பகல் எந்தவொரு முன்அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது.

ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லெபனானில் அங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்களைச் சேகரித்து வருவதாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பலி எண்னிக்கை 250-ஐ கடந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. 1,150-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா குழு மீதான தாக்குதலும் உள்ளடக்கம் என்றே மத்தியஸ்தம் செய்துவரும் பாகிஸ்தான் தெரிவித்தாலும், இந்த ஒபந்தம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்குப் பொருந்தாது என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பெய்ரூட், தெற்கு லெபனான், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் வெறும் பத்தே நிமிஷங்களில் ஹிஸ்புல்லாக்களின் இருப்பிடங்களில் 100 இலக்குகளைக் குறிவைத்து புதன்கிழமை தாக்கியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது.

Summary

Israeli strikes hit several dense commercial and residential areas in central Beirut without warning Wednesday afternoon, hours after a ceasefire was announced in the U.S.-Israeli war with Iran. Lebanon’s health ministry said dozens were killed and hundreds wounded in an early estimate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.