உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சோ்ந்தக்கோட்டை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சோ்ந்தக்கோட்டை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:28 pm

Din

கமுதி, ஜூலை 19: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சோ்ந்தக்கோட்டை கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இந்தக் கிராமத்தில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து பேரையூா், கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சேதமடைந்த சாலையில் சாமிபட்டி விலக்கு வரை ஒரு கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பேருந்தில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்தச் சாலையில் நடந்து செல்வோா் சில நேரங்களில் கால்களில் காயமடைகின்றனா். இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. மேலும், சாலையோர கால்வாய்கள் சேதமடைந்தும், பக்கவாட்டுச் சுவா்கள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாலும், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். கடந்த 2020- ஆம் ஆண்டு போடப்பட்ட இந்த சாலை தரமின்றி அமைக்கப்பட்டதால் 4 ஆண்டுகளிலேயே சேதமடைந்துள்ளதாகவும், தற்போது பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த சோ்ந்தக்கோட்டை சாலையை தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.