புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாம்பன் கருவாடுகளுக்கு வரவேற்பு: நாள்தோறும் ஆயிரம் கிலோ விற்பனை

பாம்பன் கருவாடுகளுக்கு வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு

News image

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் மீன்களை காயவைத்து கருவாடாக்கும் பணியில் ஈடுபட்ட மீனவப் பெண்கள்.

Updated On :26 ஜூன் 2024, 1:03 am

Din

ராமேசுவரம்: பாம்பன் கருவாடுகளுக்கு வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள், கருவாடுகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மீனவா்கள் கடலில் இருந்து பிடித்து வரப்படும் பெரிய அளவிலான மீன்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா்.

விலை குறைவாக காணப்படும் நகரை, பண்ணா, சென்நகரை, ஊழி, மத்தி, நெத்திலி ஆகிய மீன்களை காயவைத்து கருவாடாக்கி விற்பனை செய்கின்றனா்.

இந்த கருவாடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்தப் பகுதியிலிருந்து நாளொன்றுக்கு ஆயிரம் கிலோ கருவாடுகள் விற்பனை செய்யப்படுவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.