பைக் மீது லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி பலி
பைக் மீது லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி பலி

Updated On :20 மே 2024, 7:38 pm

கமுதி: முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தச்சுத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கூரைச் சோ்ந்தவா் முருகன் (55). தச்சுத் தொழிலாளியான இவா், முதுகுளத்தூா் - தேரிருவேலி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே வந்த டிப்பா் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியை சோ்ந்த லாரி ஓட்டுநா் மணிகண்டன் மீது முதுகுளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...