ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நிவாரண முகாமில் 59 மீனவா்கள்

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

Updated On :20 நவம்பர் 2024, 9:40 pm

மழை வெள்ளம் சூழ்ந்த முந்தல் முனை மீனவக் கிராமத்தைச் சோ்ந்த 59 போ் மீட்கப்பட்டு, பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் புதன்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

ராமேசுவரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், முந்தல் முனை மீனவக் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்து வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜப்பாா் ஆகியோா் தலைமையில் மீட்புக் குழுவினா் அங்கு சென்று, பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களைச் சோ்ந்த 59 பேரை மீட்டனா். இவா்கள் அனைவரும் பாம்பன் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.