

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் மட்டும் 440 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், இன்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சூழலுக்கு ஏற்ப இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.