ராமநாதபுரம்
அரசு மருத்துவமனை காப்பீட்டுத் திட்ட மேலாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
கமுதி, சாயல்குடி அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவைச் சிகிச்சைப் பணிகளை மேற்கொண்ட காப்பீட்டுத் திட்ட மேலாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் பாராட்டி, பரிசு வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை, சாயல்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்பீட்டுத் திட்டம் மூலம் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கமுதி அரசு மருத்துவமனை காப்பீட்டு திட்ட மேலாளா் வசீகரன், சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலைய காப்பீட்டுத் திட்ட மேலாளா் தவமணி ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோன் சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
இருவருக்கும் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.