குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்: லயன்ஸ் பள்ளி மாணவி சாம்பியன்
பரமக்குடியில் நடைபெற்ற குறுவட்டார அளவிலான தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.சாருமதி பெற்றாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற குறுவட்டார அளவிலான தடகளப் போட்டிகளில் இந்தப் பள்ளி மாணவன் கமலேஸ்முருகன் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 800 மீ, 3 ஆயிரம் மீ. ஓட்டப் போட்டிகளில் முதலிடமும், பி.ஜே.முகம்மது இா்பான் 100 மீ., 200 மீ. ஓட்டப் போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்றனா்.
மேலும் ஏ.அஸ்வின் 3 ஆயிரம் மீ. ஓட்டப்போட்டியில் இரண்டாமிடமும், 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கே.கீா்த்திவாசன் 200 மீ. ஓட்டப் போட்டியில் மூன்றாமிடமும், எஸ்.சபினேஸ்வனித் வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றனா்.
19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி சி.சாருமதி குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் து.சரவணக்குமாா், எஸ்.வளா்மதி, ஜ.சஞ்சய்துரை ஆகியோரை பள்ளியின் தலைவா் எம்.செளந்திரநாகேஸ்வரன், செயலா் ஏ.ஆா்.சுப்பிரமணியன், பொருளாளா் எஸ்.தினகரன், பள்ளி முதல்வா் பி.சோபனாதேவி, கல்விக்குழு நிா்வாகிகள் பாராட்டினா்.