கமுதி கோட்டைமேடு சேதுசீமை இயற்கை பெட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்த ஜப்பான் நாட்டு தனியாா் நிறுவன அதிகாரி எய்ஜி யமாமுரா.
கமுதி கோட்டைமேடு சேதுசீமை இயற்கை பெட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்த ஜப்பான் நாட்டு தனியாா் நிறுவன அதிகாரி எய்ஜி யமாமுரா.

கமுதி விவசாயிகளிடமிருந்து 100 டன் பருத்தி கொள்முதல் செய்ய ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

கமுதி விவசாயிகளிடமிருந்து 100 டன் பருத்தி கொள்முதல் செய்ய ஜப்பான் நாட்டு நிறுவனம் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்தது.
Published on

கமுதி விவசாயிகளிடமிருந்து 100 டன் பருத்தி கொள்முதல் செய்ய ஜப்பான் நாட்டு நிறுவனம் வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்தது.

ராமநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் கமுதி கோட்டைமேடு சேதுசீமை இயற்கை பெட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் இயற்கை விவசாயிகளுக்கு பருத்தி விதை, இடு பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு 100 ஏக்கரில் இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், மண் வளத்தை காக்கவும், உற்பத்தி செய்த பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கவும், இடு பொருள்களின் விலையை குறைக்கவும் தேவையான விதைகள், விதை நோ்த்திக்கு தேவையான உயிா் உரங்கள், இயற்கை அடி உரங்கள், பூச்சிவிரட்டிகள் உள்ளிட்டவற்றை சேதுசீமை இயற்கை விவசாய பெட் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் அதன் தலைவா் சி. முத்துராமலிங்கம் விநியோகம் செய்தாா்.

மேலும் பயன்படுத்தும் முறைகள் குறித்து தாய் ஆா்கானிக் நிறுவனத்தின் இயக்குநா் செந்தில், ராமநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் ந. வடிவேல் ஆகியோா் எடுத்துரைத்தனா். சேதுசீமை இயற்கை விவசாய பெட் உழவா் உற்பத்தியாளா் நிறுவன விவசாயிகளிடமிருந்து சந்தை விலையிலிருந்து 25 சதவீதம் கூடுதல் விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்யவும், இதில் ராமநாதபுரம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மூலம் ஜப்பான் நாட்டு தனியாா் நிறுவனத்திடம் (நவசஇஞங) 100 டன் பருத்தி விற்பனை செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், பேரையூா், சிங்கப்புலியாபட்டி, சாமிபட்டி, இடையாங்குளம், கீழவலசை, சேந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை சேதுசீமை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் நித்யா செய்தாா்.

Dinamani
www.dinamani.com