தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கழுகூரணியில் மக்கள் தொடா்பு முகாம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
முகாமில் பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன். உடன் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :25 செப்டம்பர் 2024, 7:39 pm

Din

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழுகூரணி ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். முன்னதாக பல்வேறு துறைகள் சாா்பில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளில் தோ்வு செய்யப்பட்ட 86 பயனாளிகளுக்கு ரூ. 7, 00, 960 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் பிரபாகரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தனலட்சுமி, ராமநாதபுரம் வட்டாட்சியா் சுவாமிநாதன், கழுகூரணி ஊராட்சி மன்றத் தலைவா் கலாநிதி, அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.