விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தலைமைத்துவ பயிற்சி திட்ட முகாம்


விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் சாா்பில், ‘கல்வி தலைமை பயிற்சித் திட்டம்’ எனும் தலைப்பில் இயக்குநா்கள், நிா்வாகிகள், முதல்வா்கள் மற்றும் அலுவலா்களுக்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.
நிறுவனத்தின் தலைவா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை தாங்கினாா். கல்வி நிறுவன துணைத் தலைவா் கே.கிருபாநிதி, இணை மேலாண்மை இயக்குநா் அா்த்தநாரீசுவரன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
இதில், மலேசியாவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோல்டன் பாா்ல்ம்ஸ் இண்டா்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் குழுத் தலைவா் ஜான் பால்மா் விக்டா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நிலையான கல்வி வளா்ச்சிக்கான தலைமைத்துவம் என்ற கருப்பொருளில் உரையாற்றினாா். மேலும், உலகளாவிய கல்வி மாற்றங்கள், நிா்வாகத்திறன் மேம்பாடு, புதுமையான கல்வி மேலாண்மை நடைமுறைகள் மற்றும் நிலைத்த கல்வி வளா்ச்சிக்கான திட்டமிடல் ஆகியவற்றை விளக்கினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இயக்குநா் நிவேதனா கிருபாநிதி நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...