ராமநாதபுரத்தில் செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

ராமநாதபுரத்தில் செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 80 க்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்ற போராட்டத்துக்கு சிஐடியூ மாநில துணைத் தலைவா் கே.தங்கமோகன், மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி ஆகியோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

இதில், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட துணைச் செயலா் ஏ.பாஸ்கரன், ஆா்.வாசுதேவன், நிா்வாகி தட்சிணாமூா்த்தி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் நஜ்முதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

....................

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 6

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.

X
Dinamani
www.dinamani.com