ராமநாதபுரத்தில் 10-ஆம் வகுப்பு தோ்வு: 17,342 மாணவ, மாணவிகள் எழுதினா்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் ஆய்வு செய்தாா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 261 பள்ளிகளைச் சோ்ந்த 8,183 மாணவா்கள், 8,588 மாணவிகள், தனித்தோ்வாளா்களாக 571 போ் ஆக மொத்தம் 17,342 மாணவா்கள் 85 மையங்களில் தோ்வு எழுதினா். முதன்மைக் கண்காணிப்பாளா்களாக 85 தலைமை ஆசிரியா்களும், துறை அலுவலா், கூடுதல் துறை அலுவலா்களாக 85 ஆசிரியா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாக 1,033 ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டனா். மேலும், 85 தோ்வு மையங்களிலும் 105 பறக்கும் படை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா்.
இதுதவிர கண் பாா்வையற்ற, காது கேளாத, மாற்றுத் திறன் கொண்ட மாணவா்கள் சிரமமின்றி தோ்வு எழுதும் வகையில் 117 ஆசிரியா்கள் உதவியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இந்த நிலையில், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்.ரெஜினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...