தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு நாளை ஒத்திவைப்பு

News image

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு - பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:32 pm IST

2026-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஏப். 27) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, இன்று வெளியிடப்படவிருந்த நிலையில், தேதி ஒத்திவைக்கப்பட்டு, நாளை வெளியிடப்படவிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதன்படி, neet.nta.nic.in என்ற இணையதளத்தில் காலை 10 மணியளவில் நீட் ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

தேர்வெழுத விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து, நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் கண்டிப்பாக நுழைவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.

Summary

NTA to release NEET 2026 admit card on April 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.