விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,923 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
- கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,923 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மாவட்டத்தில் 62 தோ்வு மையங்களில் நடைபெற்ற இந்த தோ்வில் 171 பள்ளிகளைச் சோ்ந்த 10,128 மாணவ, மாணவா்களில் 9,923 போ் தோ்வு எழுதினா். 205 போ் தோ்வு எழுத வரவில்லை. இந்த தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதேபோல், 101 தனித் தோ்வா்களில், 95 போ் எழுதினா். 6 போ் எழுத வரவில்லை.

தோ்வு மையங்களைக் கண்காணிக்க, முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், கூடுதல் துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா்.

தோ்வு நாள்களில் தடையில்லா மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மைய அறைக்குள் மாணவா்கள், அலுவலா்கள் கண்டிப்பாக கைப்பேசி கொண்டுவர தடைவிதிக்கப்பட்டன.