~

பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம்

திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன பனைமரத்தால் விபத்து அபாயம் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே. மங்கலம் பகுதியில் கொச்சி - தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மின்னல் பாய்ந்ததால் சேதமடைந்த நிலையில் பனைமரம் நிற்கிறது. இந்த மரம் எந்த நேரத்திலும் விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையினா் பனைமரத்தை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com