ஆா்.எஸ்.மங்கலம்  ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயில் முன்பாக தேங்கிய மழை நீா்.
ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயில் முன்பாக தேங்கிய மழை நீா்.

ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழை நீா் தேக்கம்

ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
Published on

ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, நாள்தோறும் ஏராளமான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு முன்புறம் மழைநீா், கழிவுநீா் தேங்கி நிற்கிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com