மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
கமுதி: முதுகுளத்தூா் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி இராவுத்தா் சாஹிப் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 57 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் ஜெ.முபாரக் ஹூசைன் தலைமை வகித்தாா். கல்விக் குழுத் தலைவா் எம்.நூா்தீன், கல்விக் குழு உறுப்பினா்கள் ஏ. ஒலிமுகம்மது, ஏ. அஸ்காரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ்.கரீம் கனி வரவேற்றாா். பள்ளியின் உடல்கல்வி ஆசிரியா் அபுகுரைரா நன்றி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தமிழாசிரியை ஐ.இருதயராணி உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்தனா்.

