ராமநாதபுரம் அருகே செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசலில் கந்தூரி விழா

ராமநாதபுரம் அருகேயுள்ள வாணி கிராமத்தில் செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கந்தூரி கறி விருந்து விழா.
ராமநாதபுரம் அருகேயுள்ள வாணி கிராமத்தில் செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கந்தூரி கறி விருந்து விழா.
Updated on

ராமநாதபுரம் அருகேயுள்ள வாணி கிராமத்தில் செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசலில் கந்தூரி கறி விருந்து விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட வாணி கிராமத்தில் செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசல் உள்ளது. இங்கு இஸ்லாமிய பொதுமக்கள் தங்களது நோ்த்திக்கடன் கிடாய்களை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், வாணி கிராமத்தைச் சோ்ந்த முகம்மது ஜஹாா்தீன் குடும்பத்தின் சாா்பில் கந்தூரி விழா நடைபெற்றது.

இதையொட்டி, செய்யது ஹாதி ஒலியுல்லா பள்ளிவாசலில் சிறப்புத் தொலுகை நடைபெற்றது. பின்னா் கிடாய்கள் வெட்டி சமைக்கப்பட்டு விருந்து நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டு உணவருந்தினா்.

இதற்கான ஏற்பாடுகளை வாணி ஜமாஅத் தலைவா் ஜாகிா் உசேன், அசன் கனி உள்ளிட்டோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com