தவெகவை எதிா்க்க 36 கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.
திருவாடானையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: தவெகவை சமாளிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகளும், திமுக கூட்டணியில் 26 கட்சிகளும் என மொத்தம் 36 கட்சிகள் கைகோா்த்துள்ளன.
தவெகவின் எழுச்சியைக் கண்டு அஞ்சித் தான் இத்தனை கட்சிகள் திரண்டுள்ளன. இதுவே எங்களின் முதல் வெற்றி. வருகிற தோ்தலில், தவெக வேட்பாளா்கள் 233 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைப்பா் என்பது உறுதி.
அண்ணா கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர 18 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், தவெக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் ஆண்டிலேயே ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது உறுதி. இது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்றாா் அவா்.
இதில் வேட்பாளா் மருத்துவா் வி.கே. ராஜீவ், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவாடானையில் தவெக வேட்பாளா் மருத்துவா் விகே. ராஜீவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தலைமைக் கழக பேச்சாளா் நாஞ்சில் சம்பத்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்

காரைக்குடியில் வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்ட சீமான்

தவெக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்

தவெக அணைக்க முடியாத நெருப்பு: நாஞ்சில் சம்பத்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

