சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

News image

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:26 am IST

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் வேதஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 17- ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக திருக்கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு ஸ்ரீமீனாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீசொக்கநாதசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அப்போது பெண்கள் தங்களது திருமங்கல்யத்தை மாற்றிக் கொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.