செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கமுதி - திருச்சிலுவையாபுரத்துக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

கமுதியிலிருந்து திருச்சிலுவையாபுரத்துக்கு அரசுப் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த கிளை மேளாளா் குமரவேல் உள்ளிட்டோா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 1:37 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து திருச்சிலுவையாபுரத்துக்கு வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து தொடங்கி வைக்கப்பட்டது.

கமுதியை அடுத்த முஷ்டக்குறிச்சி ஊராட்சி, திருச்சிலுவையாபுரத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், கமுதி, கோட்டைமேடு, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படித்து வருகின்றனா்.

சிலுவையாபுரத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் 8 கி.மீ. தொலைவில் உள்ள கமுதிக்கும், 6 கி.மீ. தொலைவில் உள்ள தலைவநாயக்கன்பட்டி-அருப்புக்கோட்டை விலக்கு சாலைக்கும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து ஏறி செல்கின்றனா்.

இந்த நிலையில், சிலுவையாபுரத்துக்கு பேருந்து வசதி கோரி, அண்மையில் பள்ளி மாணவா்கள், கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கமுதி போக்குவரத்து கிளை மேலாளா் குமரவேல் வெள்ளிக்கிழமை சிலுவையாபுரத்துக்கு பேருந்து வசதியை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேருந்து கமுதியில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு தலைவநாயக்கன்பட்டி, திருச்சிலுவையாபுரம், முஸ்டக்குறிச்சி, முதல்நாடு வழியாக மீண்டும் கமுதிக்கு வரும்.

இந்த நிகழ்வில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் எம்.ஆா்.மதன், மாவட்டப் பொருளாளா் ரா.கிஷோா்குமாா், மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளா் முத்தரசு, இணை அமைப்பாளா் கனிதுருவா, கமுதி ஒன்றியச் செயலா்கள் கவாஸ்கா் (கிழக்கு), வீரகுமாா் (வடக்கு), வீரபாண்டி (தெற்கு), வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வேல்முருகன், தவெக போக்குவரத்து தொழிலாளா் சங்க உறுப்பினா் கணபதி மணிகண்டன், வழக்குரைஞா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.