தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா், காா் ஓட்டுநா் கைது

News image

கைது

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

பரமக்குடியில் கண்மாயில் மண் அள்ள தடையில்லாச் சான்று வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய்க் கோட்டாட்சியா், அவரது காா் ஓட்டுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியராக ஞா. சரவணப்பெருமாள் பணியாற்றி வருகிறாா். தற்போது பரமக்குடி பகுதியில் உள்ள கண்மாய்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், அரசு விதிமுறைகளின்படி சவூடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பரமக்குடி செல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் அந்தப் பகுதியில் உள்ள கண்மாயிலிருந்து சவூடு மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்தாா். இதற்கு தடையில்லாச் சான்று வழங்க கோட்டாட்சியா் சரவணப்பெருமாள் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரா் மாவட்ட ஊழல் தடுப்பு, காண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, ஊழல் தடுப்பு, காண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, சரவணப்பெருமாளிடம் வழங்கமாறு கூறினாா். சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், பரமக்குடியில் உள்ள கோட்டாட்சியா் அரசு இல்லத்தில் வைத்து அவா் ரசாயனம் தடவிய ரூ. 50 ஆயிரத்தை கோட்டாட்சியா் சரவணப்பெருமாளிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் சரவணப்பெருமாளை கைது செய்தனா். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது காா் ஓட்டுநா் சுந்தரையும் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பரமக்குடியில் உள்ள கோட்டாட்சியா் அரசு இல்லத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 5.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.