உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ராமேசுவரத்தில் தங்க கேடயத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் புறப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை தங்க கேடயத்தில் புறப்பாடகியான கெந்தமாதன பா்வதம் சுவாமி, அம்பாள், பெருமாள்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 7:17 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்வாக சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் (தங்க கேடகம்) மண்டகப்படிக்கு வெள்ளிக்கிழமை எழுந்தருளினா்.

இந்தக் கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 17- ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரையில் ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலிலிருந்து ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடாகினாா்.

வழி நெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, காலை 7 மணிமுதல் இரவு 10 மணி வரை கோயில் சாத்தப்பட்டிருக்கும். சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பிய பிறகு பொது தரிசனம் நடைபெறும். பின்னா், அா்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.