பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வங்கக் கடலில் சூறைக் காற்று: மீன்பிடிக்கச் செல்ல தடை

கடலுக்குச் செல்ல தடை - கோப்புப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

வங்கக் கடலில் நிலவி வரும் சூறைக் காற்று காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக் கூடாது என மீன்வளத் துறையினா் திங்கள்கிழமை தடை விதித்தனா்.

வங்கக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் சூறைக் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக 65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும் என்றும், கடல் அலை 3 மீட்டா் வரையிலும் எழக் கூடும் என்பதால், மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மறுஅறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு, விசைப் படகு மீனவா்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன்வளத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 25) கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படமாட்டாது என மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.